கிண்ணியாவில் புதிய வீடுகள் கையளிப்பு!

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகளின் திறப்பு விழாவும், பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வும் இன்று (25) காலை கிண்ணியா அண்ணல் நகரில் நடைபெற்றது.

*“தமக்கென ஒரு வீடு – அழகான வாழ்க்கை”* எனும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீடும் தலா 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கே இவ்வீடுகள் வழங்கப்பட்டன.

கிண்ணியா பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளரும், கிண்ணியா பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி உறுப்பினருமான எம்.ஈ.எம். றாபிக், கிண்ணியா நகரசபை உறுப்பினர் ஏ.எம். இம்ரான், பிரஜாசக்தியின் அண்ணல் நகர் வட்டார உறுப்பினர் ஏ.வி.எம். சரீப், மஹ்ரூப் வட்டார உறுப்பினர் ஆர்.எம். அம்ஜாத், மாஞ்சோலை வட்டார உறுப்பினர் எம்.டி. சஜாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஏழைக் குடும்பங்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்கும் மற்றுமொரு முயற்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *