இலங்கையின் பெருந்தோட்டத்துறை தற்போது பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அதன் எதிர்காலத்தைப் பாதுகாக்க ஆறு முக்கிய சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டுமென இலங்கை பெருந்தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷானக சமரவிதாரக வலியுறுத்தியுள்ளார்.
தேயிலை உற்பத்தி, இறப்பர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்து வருவதுடன், தொழிலாளர் சம்பளம் மற்றும் உரத்தின் விலை அதிகரிப்பும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குத் தீர்வாக பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகைக் காலத்தை நீடித்தல், மாற்றுப் பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல், பெறுமதி சேர்க்கப்பட்ட தேயிலை உற்பத்தி, நவீன தொழில்நுட்பம், நீர்வள முகாமைத்துவம் மற்றும் காணி நிர்வாகச் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட ஆறு முக்கிய நடவடிக்கைகளை அவர் முன்மொழிந்துள்ளார்.
இதேவேளை, பெருந்தோட்டத்துறையின் முதலீட்டுப் பாதுகாப்புடன் மலையகத் தொழிலாளர்களின் ஊதியம், வாழ்வாதாரம் மற்றும் சமூக உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது.
இலங்கையின் பெருந்தோட்டத்துறையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வகையில் இந்தச் சீர்திருத்தங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

