6 கிலோ கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில், வவுனியாவில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து போதைப்பொருள்களும் மீட்கப்பட்டன.