விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலத்தில் புலமைப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் எடுத்த மாணவர்கள் கௌரவிப்பு

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட விநாயகபுரம் கனிஷ்ட வித்தியாலயத்தில் புலமைப்பரிசிலில் வெட்டுப்புள்ளிக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கு ஏழைகளின் தோழன் மின்னல் குழுவினர் மற்றும் விநாயகபுரம் சாமினி நகைத்தொழிலகத்தின் அனுசரனையில் பரிசுக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வானது பாடசாலை நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் ஏழைகளின் தோழன் மின்னல் குழுமத்தின் உறுப்பினரும் விநாயகபுரம் சாமினி நகையக உரிமையாளருமான திரு. பாஸ்கரன் மற்றும் சமூக செயற்பாட்டாளரும் சமுக ஊடகவியலாளருமான ஜே.கே.யதுர்ஷன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *