குற்றச் செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்வதற்கு வீடு சென்ற வேளை பொலிஸாரைக் கண்டு ஓடிய குடும்பஸ்தர் அருகிலுள்ள வீட்டின் கிணற்றினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இராமநாதபுரம் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றிவு(24) 6.30 மணி அளவில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 6ம் யூனிட் இராமநாதபுரம் ஆலடி பகுதியில் தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இச் சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


