அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேசத்தில் இயங்கிவரும் பெரண்டினா நிறுவனத்தின் அனுசரனையில் அவர்களின் வாடிக்கையாளர்களில் காணப்படும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவ காலத்தில் தேவையான பாவனைப்பொருள்கள் வழங்கும் நிகழ்வு திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தில் இடம்பெற்றது.
பெரண்டினா திருக்கோவில் கிளையின் முகாமையாளர் திரு கோபிகரன் தலைமையில் இடம்பெற்றதுடன் கிளையின் கடன் வழங்கும் அதிகாரிகளான திரு.சங்கீத், லிதுஷன், லதுராஜ், உமாசந்திரன் ஆகியோரும் திருக்கோவில் சுகாதார வைத்திய பணிமனையின் உத்தியோத்தர்கள், காவல் துறை உத்தியோகத்தர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த பொருட்களை கையளித்தனர்.
பெரண்டினா நிறுவனத்தினால் கடந்த காலங்களில் வாழ்வாதார உதவித் திட்டங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


