நுவரெலியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற தனியார் பஸ் வீதியை விட்டு விலகி விபத்து

நுவரெலியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற தனியார் பஸ்ஸொன்று, நுவரெலியா – வலப்பனை பிரதான பாதையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தானது, நேற்று(28) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றது,

யாழ்ப்பாணத்திலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா வந்த 28 பேர் கொண்ட குழுவொன்று, மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​இயந்திரக் கோளாறு காரணமாக பஸ்ஸின் பிரேக்குகள் திடீரென செயலிழந்ததால், பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், விபத்துக்குள்ளான பஸ்ஸில் இருந்த பயணிகள் புதிய பஸ்ஸில் ஏறிச் யாழ்ப்பாணம் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *