யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு

தமக்கான ஊதிய உயர்வு மற்றும் கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்று தற்போது நிறுத்தப்பட்ட சில சலுகைகளை மீள வழங்கல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்துடன் இணைந்து ஒரு நாள் அடையள போராட்டம் ஒன்றை இன்று(30) முன்னெடுத்தனர்.
யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து முன்னெடுக்கப்பட்ட குறித்த எதிர்ப்புத் தெரிவிக்கும் அடையாளப் போராட்டம் இன்று காலை 10.15 மணிக்கு பல்வேறு கோஷங்கள் அங்கிய பதாதைகளை ஏந்தியவாறு முன்னெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *