ஊடகவியலாளர் “தாரகி” சிவராம் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவில் , அவரது நினைவஞ்சலி நிகழ்வு நேற்று(28) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இதன்பின்னர் இயக்குனர் சோமீதரனின் “தராகி” ஆவணப்படம் திரையிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இவர் இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் தமிழ்நாட்டின் பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார்.
கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்பாக வெள்ளை நிற வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இவர் தாக்கப்பட்ட பின்னர் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவரது தலையை இலக்கு வைத்து, 9 மில்லி மீற்றர் வகை கைத்துப்பாக்கியினால் இவர் சுடப்பட்டிருந்தார்.


