சுற்றுலாப் பிரதேசமாக விளங்கும் பாசிக்குடா அனிலானா கொட்டலுக்கு அருகிலுள்ள பற்றைக்காடுகள் தனியார் தென்னந் தோப்புகளில் திடீரென தீப்பற்றியது.
தகவல் அறிந்து பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன் மற்றும் பிரதேச சபை உப தவிசாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து சபை தண்ணீர் வவுசர், ஓட்டமாவடி சபை வவுசர் மாநகர சபை தீயணைக்கும் இயந்திரம் கொண்டு தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
இராணுவத்தினரும் பங்களிப்பு செய்திருந்தனர். கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் திருமதி ஜெயானந்தி, திருச்செல்வம் சுற்றுலா விடுதி மேலாளர் மாகீர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
கோறளைப்பற்று பிரதேச சபைக்கு தீயணைப்பு இயந்திரம் இல்லை. இதனால் இப்பிரதேசத்தில் அடிக்கடி ஏற்படும் தீப் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு சிரமமாகவுள்ளதாகவும் மட்டக்களப்பில் இருந்து வரும் வரை காத்திருக்கும் நிலை ஏற்படுவதாக தவிசாளர் கவலை தெரிவித்துள்ளார்.


