நவராத்திரி பூஜையின் இறுதி நாளான விஜயதசமியின் வித்தியாரம்பம்

பாடசாலைகள் ஆலயங்கள் அலுவலகங்கள் போன்ற இடங்களில் விஜயதசமி நிகழ்வு நடைபெற்றன.

இராமகிருஷ்ண மிசனிலும் இவ் நிகழ்வானது வருடா வருடம் இடம்பெறுகிறது வழக்கம். இவ் வருடமும் விஜயதசமியன்று பிள்ளைச்செல்வங்களுக்கான வித்தியாரம்ப நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

பிள்ளைகள் ஒவ்வொருவராக வரிசையாக வந்து இராமகிருஷ்ணமிஷன் நீலமாதவானந்தா சுவாமி முன்னிலையில் பிள்ளைகள் அமர்ந்து அவர்களுக்கு நாக்கில் சுவாமி தேனைத் தடவி அழகாக நல்ல உச்சரிப்புடன் பிள்ளைகளின் முன்னுள்ள தட்டில் உள்ள அரிசியில் அவர்களின் விரல்களினால் “அ” என்ற எழுத்தை எழுதி தேன் தடவிய நாக்கினுடன் உச்சரிப்பை சொல்லிக் கொடுப்பார்.

இந் நிகழ்வானது வருடாவருடம் இடம்பெறும் நிகழ்வாகும்.

இவ் வித்தியாரம்ப நாளில் மக்களும் அவர்களுக்குரிய நல்ல விடயங்களை செய்து நலன் பெறுவது தொன்று தொட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *