சித்தனோடை மேல் விழுநீர்தொடர் தொகுதியில் அரசபுரம் பகுதியில் 300 மரங்கள் நடும் நிகழ்வு

காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாய திட்டத்தினால் விழிநீர்த்தொடர் தொகுதியின் முகாமைத்துவ திட்டத்தின் கீழ் அடையாளங்காணப்பட்டவற்றில் ஒன்றான சித்தனோடை மேல் விழுநீர்தொடர் தொகுதியில் அரசபுரம் பகுதியில் இன்று(02) வேம்பு மற்றும் மருது உள்ளடங்களாக 300 மரங்கள் அரசபுரம் கமக்கார அமைப்பினால் திட்டத்தின் அனுசரனையில் நடப்பட்டன.

இதில் திட்டத்தின் எந்திரி பி.பிரதீப் மற்றும் அப்பிரிவிற்கான கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.குணசீலன், திட்ட, திணைக்கள சார் உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதிக்குரிய விவசாய மக்கள் பங்கேற்றனர்.

இரண்டு விழுநீர்தொடர் தொகுதிகளில் ஏற்கனவே நடப்பட்ட நிலையில் தொடர்ந்தும் ஏனைய விழுநீர்த்தொடர் தொகுதிகளில் திட்டத்தால் இம் மரநடுகை முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *