யாழில் மாணவனை தாக்கிய ஆசிரியர்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழில் ஆசிரியர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்கான பாடசாலை மாணவர் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியரொருவர் குறித்த மாணவரை முழந்தாளிட வைத்து அடித்தார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *