மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவில் கருங்காலிச்சோலை பேத்தாழையைச் சேர்ந்த கணவனும் மனைவியும் போதைப்பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் பேரில் அவர் மேற்கொண்ட துரித நடவடிக்கையில் இவர்கள் சென்ற முச்சக்கரவண்டியானது மட்ட க்களப்பு கொழும்பு பிரதான வீதியில் வைத்து பொலிஸார் மேற்கொண்ட பரிசோதனையின் பிரகாரம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடம் இருந்து 230 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் பயணம் செய்த முச்சக்கர வண்டி கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

