வந்தாறுமூலையில் கடற்படை கனகர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்; சாரதி கைது

வாழைச்சேனையில் இருந்து ஏறாவூர் நோக்கிப் பிரயாணித்த கடற்படை கனகர வாகனம் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில், வீதியால் சென்ற பாதசாரி ஒருவர் மீது நேற்று(07) இரவு மோதிய விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வாகன சாரதியான கடற்படை வீரரைக் கைது செய்துள்ளதாகவும் வாகனத்தை தடுத்து வைத்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்லடி கடற்படைத் தளத்திற்குச் சொந்தமான கனகர வாகனம் வாழைச்சேனையில் இருந்து ஏறாவூர் நோக்கி சம்பவ தினமான நேற்று இரவு 10.30 மணியளவில் பிரயாணித்துக் கொண்ட நிலையில் வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அருகில், வீதியால் சென்ற பாதசாரி மீது விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து குறித்த வாகனத்தின் சாரதியான கடற்படை வீரரைக் கைது செய்ததுடன் வாகனத்தைத் தடுத்து வைத்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *