முல்லைத்தீவு – கொழும்புக்கான குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்து சேவை, இந்த மாதத்துக்குள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அமைச்சின் அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

