கிளிநொச்சி – பூநகரி, சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் உடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரியால் வெளியிடப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை ஊடாக இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் உடலம், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவன் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, அந்த பெண் கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த பெண்ணின் தலையில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டு, அவர் கடலுக்குள் வீசப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவரது நுரையீரலில் நீர் புகுந்து, மூச்சுத்திணறலால், அவர் உயிரிழந்தமை உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

