முச்சக்கரவண்டி தொடருந்துடன் மோதுண்டதில் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு

முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதுண்டதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(13) பளை – இத்தாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாண நோக்கிப் பயணித்த யாழ். தேவி தொடருந்துடன் கடவையைக் கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி மோதுண்டுள்ளது.

சம்பவத்தில் பளை – வண்ணாங்கேணி வடக்கு பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் கொடிகாமம் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவ தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *