தர்மபுரத்தில் தனியார் காணியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு மீட்பு

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் நேற்று(13) வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த தனியார் காணியினை துப்புரவு செய்துகொண்டிருந்த பொழுது வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த தர்மபுரம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி நீதிமன்ற அனுமதியின் பின்னர் அப்பகுதியில் இருந்து குண்டினை பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *