யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பப் பெண் விபத்தில் உயிரிழப்பு

யாழில் இருந்து கட்டுநாயக்கா நோக்கிப் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் யாழ்.ஏழாலை வடக்கைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருமணமாகி ஒரு வருடமும் பூர்த்தியாகாத நிலையிலேயே குறித்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

இன்று(16) அதிகாலை இடம்பெற்ற மேற்படி சம்பவத்தில் 60 வயதான பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதுடன் மேலும் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.

இச் விபத்து சம்பவத்தில் ஏழாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த அகிலன் திவ்யா (வயது-31) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *