இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து உழைப்பாளர் தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்த கூட்டு மே தின பேரணி இன்று(01) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
ஆசிரியர் மற்றும் அத்துறைசார் தரப்பினரது ஊதியம் அதிகரிப்பு , கல்வித்துறையில் அரசியல் தலையீடு இருக்க கூடாது, மக்களின் காணி நிலங்கள் விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த மேதின பேரணியானது இன்று முற்பகல் நடைபெற்றது.
யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த மேதினப் பேரணியானது, யாழ் நகரின் பிரதான சாலைகளூடாக பேரணியாக சென்று யாழ் பொது நூலகம் முன்பாக நிறைவுபெற்றது.


