மட்டு வாவியில் ஆணின் சடலம் மீட்பு; அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில்  கடந்த 19 ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு மீட்கப்பட்டு அடையாளம் காணப்படாமல் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 

 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 60 வயதுடையவர் எனவும் சிவப்பு நிறத்திலான சேட் மற்றும் சாரம் அணிந்துள்ளார்.

 

அவரை அடையாளம் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அறிய தருமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *