தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் இன்று(27) அதிகாலை தர்மபுரம் பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து சட்ட விரோத போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இதன்பபோது மோப்ப நாய் சகிதம் பல வீடுகள் சோதனையிடப்பட்ட போது சட்டவிரோத கசிப்பு 40 லீற்றருடன் சந்தேக நபர் ஒருவரும், அதே பகுதியில் 05 ஐந்து கிராம் 50 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவரும், ஐந்து கிராம் 100 மில்லி ஐஸ் போதை பொருளுடன் ஆண் ஒருவரும் இவர்களிடமிருந்து 16,500 பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
குறித்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் கிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

