வடக்கில் இணைய வழி செயலி மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்

வட மாகாணத்தில் இணைய வழி செயலி மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறை இன்று முதல் ஆரம்பித்து வைக்கப்படுகிறது.

 

பொலிஸ் நிலையங்கள் அல்லது தபால் நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, போக்குவரத்து அபராதங்களை எளிதாகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் இணைய வழியில் செலுத்த அனுமதிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு அதிக வசதியை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

போக்குவரத்து பொலிஸாருக்கு தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

 

குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தன்பால, யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாறப்பண, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், போக்குவரத்து பொலிஸார், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

வட மாகாணத்தில் GovPay இணைய வழி செயலி மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை கிளிநொச்சியில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று ஆரம்பித்து வைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *