ஹட்டன் ஸ்ரீ நிக்ரோதாராம மகா விகாரையின் பிரதம விஹாராதிபதி அதிவணக்கத்திற்குரிய மகாகம விமல நாயக்க மகா தேரரின் பூத உடலுக்கு மலையக தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன், கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாத், நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

