யாழில், பிறந்து 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
கீரிமலை – நல்லிணக்கபுரம் பகுதியை சேர்ந்த தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த அந்த குழந்தை கடந்த ஜூலை 23 ஆம் திகதி பிறந்துள்ளது.
நேற்று தாயார் குறித்த குழந்தைக்கு பாலூட்டிய பின்னர் சிறிது நேரத்தில் மூக்காலும் வாயாலும் இரத்தம் வந்த நிலையில் குழந்தை மயங்கியுள்ளது.
பின்னர் தெல்லிப்பழை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் உடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார்.

