நாளைய தலைவர்களை உருவாக்குதல்; வடக்குக்கான ஆரம்ப நிகழ்வு

தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் கீழ் ‘நாளைய தலைவர்களை உருவாக்குதல்’ தேசிய வேலைத் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இன்று(30) நடைபெற்றது.

 

மாணவர்களின் மனப்பாங்கு மற்றும் தலைமைத்துவத்தை விருத்தி செய்வது தொடர்பான இந்தச் செயற்றிட்டத்தின் கீழ் 8 பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

 

காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரையில் இந்தச் செயலமர்வு நடைபெற்றது.

 

அத்துடன் இன்று மாலை மாணவர்களின் பெற்றோருக்கான செயலமர்வும் இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *