மஸ்கெலியாவில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞன் கைது

நுவரெலியாவில் மஸ்கெலியா – பிரவுன்ஸ்விக் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞன் நேற்று(30) மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே சந்தேக நபரான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மஸ்கெலியா – பிரவுன்ஸ்விக் பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *