பூநகரி பிரதேச சபையின் வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வு

பூநகரி பிரதேச சபையின் இரணைதீவு பொதுநூலகத்தின் ஏற்பாட்டில் வாசிப்பு விழிப்புணர்வு பேரணியும், முத்தொளி இதழ் 05 வெளியீடும், வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் இன்று(31) நடைபெற்றது.
வாசிப்பு மாதத்தின் இறுதி நாளான இன்று காலை 9.30மணிக்கு, முழங்காவில் ஸ்ரீ செல்வயோக சித்திவிநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
இரணைதீவு உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரி சிவபாதசுந்தரம் சபேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை மத்திய வங்கி திருகோணமலை பிராந்திய அலுவலக முகாமையாளர் திருமால் சஞ்சீவன் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக முழங்காவில் மகாவித்தியாலய அதிபர் பரதன் சிவானந்தி, இரணைதீவு றோ.க.த.க வித்தியாலய அதிபர் அமிர்தநாதன் றொபெட் கெனடி, குமுழமுனை அ.த.க பாடசாலை அதிபர் லவுசி பகீரதன், முழங்காவில் ஆரம்ப பாடசாலை அதிபர் பாலசுப்ரமணியம் சதீஸ், நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை அதிபர் மேரி றொக்ஸி றொபேட், மடு வலயத்தின் ஓய்வுநிலை பிரதிக்கல்வி பணிப்பாளர் முடியப்பு எமிலியான்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வுக்கு முன்பதாக விநாயகர் விளையாட்டுக்கழக மைதானம் முன்பாகவிருந்து வாசிப்பு விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பூநகரி பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபை செயலாளர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், முன்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *