இந்தோனேஷியத் தூதுவர், பிரதித்தூதுவர் மற்றும் ஆளுநர் இடையிலான கலந்துரையாடல்

விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியிலுள்ள இந்தோனேஷpயா தனது அனுபவங்களை வடக்கு மாகாணத்துடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், இலங்கைக்கான இந்தோனேஷியத் தூதுவர் டெவி குஸ்டினா டோபிங்கிடம் கோரிக்கை விடுத்தார்.

 

இலங்கைக்கான இந்தோனேஷியத் தூதுவர், பிரதித்தூதுவர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர், வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் இன்று மதியம் (31) சந்தித்துக் கலந்துரையாடினர்.

 

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் சத்தியசீலன், ஆளுநரின் உதவிச் செயலர் ஏகாந்தன், ஆளுநரின் இணைப்புச் செயலர் சர்வானந்தா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *