உலக வங்கியின் 20 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் விளாப்புக்குள அனிகட் விவசாயிகளிடம் கையளிப்பு

இன்று(01) உலக வங்கியின் நிதி உதவியுடன் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் கட்டம் இரண்டின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் கமநல சேவைத் திணைக்களத்தின் கீழ் உள்ள பளம்பாசி கிராமத்தில் விளாப்புகுளம் அனிகட் புனரமைக்கப்பட்டு விவசாயிகளின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

 

விளாப்பு குளத்தின் அனிகட் விவசாயிகள் கையளிக்கும் நிகழ்விற்கு உலக வங்கியின் ஆலோசகர், சியாப்பின் பொறியியலாளர் பிரதீப் மற்றும் ஒட்டுசுட்டான் கமநலசேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதி உதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தினால் கமநலசேவைத்திணைக்களத்தின் கீழ் உள்ள 23 குளங்கள் மற்றும் அனிகட்களு புனரமைக்கப்பட்டு வருகின்றன.

 

இவ்வாறு புனரமைக்கப்பட்ட அனிகட்களிலு முதன் முதலாக பளம்பாசி கிராமத்தில் உள்ள விளாப்பு குள அனிகட் விவசாயிகளின் பாவனைக்காக 20 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *