யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பொலிஸாரால் நூறு கிலோவிற்கு மேற்பட்ட 47 பொதி கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
அகன்று செல் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ் பொலிஸாரின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையின் கீழ் தற்போது போதை அற்ற நாடு வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் பருத்தித்துறை பொலிஸாரின் தீவிர கண்காணிப்பிலிருந்த சந்தேக நபர்கள் கேரள கஞ்சாவை பருத்தித்துறை பொலிஸ் பிரிவிலுள்ள கடற்பரப்பில் இறக்க முற்பட்டபோது பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையிலான பொலிஸார் சுற்றிவளைத்து 47 பொதி கஞ்சாவை கைப்பற்றியதுடன் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களும், கஞ்சா மற்றும் படகு உட்பட்ட பொருட்களும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

