யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பனையில் ஈடுபடும் நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நாவற்குழி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

