யாழில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ். தெல்லிப்பழைபகுதியில் நேற்று இரவு 8:30 மணியளவில் இடம் பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையும் யாழ் கலைஞனும் யூரியுப்பரமான வசந்தன் வயது 34 சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார்.

 

தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது வேகமாக பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது,

 

சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது,

 

மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *