திருமணம் செய்து 20 வருடங்களுக்கு பின் ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளைப் பெற்ற இளம் தாய் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளைப் பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்
இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழநதுள்ளார். மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவத்தில் யோகராஜா மயூரதி என்ற 46 வயதுடைய தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

