புதுக்குடியிருப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி; சந்தேக நபர் தப்பியோட்டம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குத் தயாராக காட்டுப் பகுதியில் மறைத்து விற்பனை செய்யப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று(08) மாலை சோதனையினை மேற்கொண்டனர்.

சோதனையின் போது அங்கு இருந்த சந்தேக நபர் பொலிஸாரைக் கண்டு தப்பியோடியதாகவும், காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 லீற்றர் அளவிலான சட்டவிரோத கசிப்பினை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் தப்பியோடிய சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *