யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு இன்று(10) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மீனவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்வழக்கினை ஆராய்ந்த நீதவான் 26 மீனவர்களுக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
அத்துடன் இரு படகுகளையும் செலுத்தியவர்களுக்கும் ஒரு படகு உரிமையாளருக்கும் 6 மாத கட்டாய சிறைத்தண்டனையும் ஒவ்வொருவருக்கும் தலா 4 மில்லியன் அபராத தொகையை செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

