யாழ்ப்பாணத்தில் நிலவும் காலநிலை சீரற்ற தன்மையால், குறிகட்டுவான் – நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் படகுகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலர் என். பிரபாகரன் அறிவித்துள்ளார்.
நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும், வடதாரகை மற்றும் நெடுந்தாரகை ஆகிய இரு படகுகளின் சேவை நேரம் வியாழக்கிழமை (13) முதல் மாற்றம் செய்யப்பட்டவுள்ளதாக அறிவித்துள்ளார்.
தற்போது நிலவும் காலநிலையில் விரைவாக இருட்டுவதனால், படகு சேவைகளை 30 நிமிடங்கள் முன்னதாக மாற்றியுள்ளோம். அதன் அடிப்படையில் நெடுந்தீவில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும் படகு, வியாழக்கிழமை முதல் 30 நிமிடங்கள் முன்னதாக 3 மணிக்கு புறப்படும். அதேபோன்று குறிகட்டுவானில் இருந்து, மாலை 5 மணிக்கு புறப்பட்ட படகு இனி மாலை 4.30 மணிக்கு புறப்படும்.
அதேவேளை ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கு பெருமளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, காலையில் நீண்ட நேரம் குறிகட்டுவானில் படகுக்கு காத்திருப்பதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.45 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும் படகு, குறிகட்டுவான் சென்று மீண்டும் காலை 08 மணிக்கு குறிகட்டுவானில் இருந்து தனது சேவையை ஆரம்பிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

