மாகாண சுகாதார சேவை பணிப்பாளரின் வடமாகாணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடமாகாணத்தைச் சேர்ந்த தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இப் பணிப்புறக்கணிப்புக் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் தாதியர்களால் மேற்கொள்ளும் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குருதி மாதிரிகளைப் பெறுதல், ஊசி போடுதல் மற்றும் தாதியர்களினால் வழங்கும் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நோயாளர்கள் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


