பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை

கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(12) அனுமதி வழங்கியது.

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகிய போதே அவர் கைது இவ்வாறு செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டதை அடுத்து கையூட்டல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னரே, கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம பிணை வழங்கி உத்தரவைப் பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *