மன்னார் மாவட்ட மடு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக அமலராஜ் இன்று(12) அதிகாரப்பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
அவரது நியமனக் கடிதம், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரனால் இன்று காலை 9.00 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது.
அமலராஜ் 1996 செப்டம்பர் 4 ஆம் திகதி எழுதுனராக அரசுப் பணியில் இணைந்து, கடந்த பல ஆண்டுகளில் பல்வேறு முக்கிய நிர்வாக மற்றும் தேர்தல் பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்கள், மன்னார் நகர பிரதேச செயலாளர், மன்னார் நகர உதவி பிரதேச செயலாளர் மற்றும் வவுனியா தேர்தல் அலுவலக அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

