யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை கிழக்கு மாதர் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில், நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன், வட்டுக்கோட்டை கிழக்கு கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன், உதவித்திட்டங்களையும் வழங்கி வைத்தார்.
வட்டுக்கோட்டை கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், புலம்பெயர்ந்த உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பொருளாதார ரீதியில் நலிவுற்ற பெண் தலைமைத்துவ குடும்பத்துக்கான வாழ்வாதார உதவியும், அதே பிரதேச முதியோர் அமைப்புக்கான நிதி உதவியும், முப்பதுக்கும் அதிகமான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நேற்று மாலை நடைபெற்ற குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் சித்தங்கேணி வட்டார உறுப்பினர் திருமதி நாகரஞ்சினி, பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



