தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த பல வருடங்களாக பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த சந்தேகநபர் ஒருவர் இன்று(15) தர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் ஐஸ் போதைப்பொருளை பெற்றுக்கொள்ள வேறு ஒருவர் போல் வேடம் அணிந்து ஐஸ் போதைப்பொருளை பெற்றுக்கொண்ட சமயம் கையும் மையமாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகமிடமிருந்து 560 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் 1000ருபா பணமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு திருட்டு சம்பவத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நாளை(16) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

