கிளிநொச்சியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுற்றிவளைப்பு ஒன்று இடம்பெற்றது.
இச் சுற்றிவளைப்பின் போது தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் இன்று(20) சட்டவிரோதமான முறையில் அனுமதிப் பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு உழவு இயந்திரங்களும் அதன் சாரதிகளும் மணல் அகழ்வுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் புளியம்பொக்கனை வண்ணாத்தியாறு பகுதியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 50 லீற்றர் கசிப்பினை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
அதன்பின்னர் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் ஆறு பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தடயப் பொருட்கள் கிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முற்படுத்தப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

