முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று(21) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியுடன் அவரது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவும் பயணித்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டுப் பயணமாக இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் அவர் சென்னை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

