நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மருத பாண்டி ராமேஸ்வரன் ஆகியோரின் பணிப்புரைக்கு அமைவாக கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்தின் வேண்டுகோளுக்கிணங்க இன்று(18) பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
டிட்வா சூறாவளி மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் இந்தியாவானது இந்த இடர் காலத்தில் ஆபரேஷன் சாகர் பந்து எனும் வேலை திட்டத்தின் கீழ் பல்வேறு உதவிகளை வழங்கியது. அந்த வகையிலே அதன் ஒரு அம்சமாக முதல் கட்ட நிகழ்வு இன்று தலவக்கலையில் இடம் பெற்றது.
இந்த நிகழ்விலே இலங்கைக்கான இந்திய உதவி ஆணையாளர் வி. எஸ். சரண்யா, கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாத் மற்றும் உறுப்பினர்கள், தலவாக்கலை நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தலைவர் உட்பட உறுப்பினர்கள், கொத்மலை பிரதேச சபையின் உப தலைவர் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவின் உதவி பணிப்பாளர் மயூரி லியனகேவும் கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் உட்பட அதன் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
கொட்டகலை பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் தலைவர் ராஜமணி பிரசாந்த பேசியபோது இந்த பேரிடர் காலத்திலே இந்தியா வழங்கி இருந்த ஆபரேஷன் சாகர் பந்து என்ற திட்டத்தின் கீழ் மிகவும் சிறப்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்த இந்திய அரசாங்கத்தின் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்த ஏற்பாடுகளை இன்று செய்த இலங்கைக்கான இந்திய உதவி ஆணையாளர் திருமதி வி.எஸ் சரண்யாவுக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டார்.

