2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக காலி முகத்திடல் உள்ளிட்ட கொழும்பின் முக்கிய பகுதிகளில் அதிகளவிலான மக்கள் மற்றும் வாகனங்கள் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுவதால், நாளை( 31) விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் போக்குவரத்து வழமை போல் அனுமதிக்கப்பட்டாலும், நெரிசல் அதிகரிக்கும் பட்சத்தில் மாற்று வீதித் திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

