பூநகரி பள்ளிக்குடா வித்தியாலயத்தில் ஒளி விழா நிகழ்வு

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் 2025ம் ஆண்டுக்கான ஒளி விழா நிகழ்வு கிளிநொச்சி பூநகரி பள்ளிக்குடா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் என். தர்சினி தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் பற்றிக் டிறஞ்சன் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் பூநகரி பிரதேச செயலாளர் ஆயகுலன், அருட்தந்தையர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மெற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *