கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் வீட்டு உரிமையாளர் இல்லாதநேரத்தில் நேற்று(29) பகல் வீட்டில் நுழைந்து வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் திருடப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய இன்று(30) விரைந்து செயல்பட்ட தர்மபுரம் பொலிஸார் கிளிநொச்சியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்
36வயதுடைய யாழ்ப்பாணம் எழாலைப்பகுதியைச்சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து தற்போது நான்கு மோதிரங்கள், ஒரு தோடு, ஒரு செயின் மற்றும் 41 ஆயிரத்து 860 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரால் பொலிசாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டில் 23 இலட்சத்து 2500 ரூபாய் பெறுமதியான தங்க நகை மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

