2026 ஆம் ஆண்டின் கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாளாகிய இன்று அரச சேவை உறுதியுரை நிகழ்வு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையில் தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
செயலாளாரின் நெறிப்படுத்தலில்
தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து
முப்படைகளின் உறுப்பினர்கள் உட்பட நாட்டிற்காக தமது உயிர்களை அர்ப்பணித்த சகலரையும் நினைவு கூருவதற்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அரச சேவை சத்தியப் பிரமாணம் சத்தமாக மொழியப்பட்டது.
அத்துடன் தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அரச கொள்கைகள், வேலைத்திட்டம் தொடர்பாகவும் மற்றும் குறித்த நோக்கத்தினை அடைந்து கொள்வதற்காக அரச ஊழியரின் பங்களிப்பு தொடர்பாகவும் அவர்களை ஊக்குவித்து குறுகிய சொற்பொழிவு ஒன்றினை தவிசாளர் நிகழ்த்தினார்.

